பஸ்சிலுள்ள பயணிகளிடம் மிளகாய் பொடியை தூவி, நகை பறித்த 2 பேருக்கு தலா 8 ஆண்டு ஜெயில்- தானே கோர்ட்டு தீர்ப்பு


பஸ்சிலுள்ள பயணிகளிடம் மிளகாய் பொடியை தூவி, நகை பறித்த 2 பேருக்கு தலா 8 ஆண்டு ஜெயில்- தானே கோர்ட்டு தீர்ப்பு
x

பஸ்சிலுள்ள பயணிகளிடம் மிளகாய் பொடியை தூவி, நகை பறித்த 2 பேருக்கு தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

தானே,

பஸ்சில் மிளகாய் பொடியை தூவி பயணிகளிடம் நகைகளை பறித்த 2 பேருக்கு தலா 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தானே கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நகைகள் பறிப்பு

தானே மாவட்டத்தில் இருந்து ஆம்னி பஸ் ஒன்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் சிறிது தொலைவில் சென்றபோது 3 பேர் வழிமறித்தனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தி உள்ளார். பின்னர் பஸ்சின் உள்ளே ஏறிய 3 பேர் திடீரென தாங்கள் வைத்திருந்த மிளகாய் பொடியை பயணிகளின் மீது தூவினர். மேலும் துப்பாக்கியை காட்டி பயணிகளிடம் நகைகளை பறித்தனர். அப்போது, அந்த பஸ்சில் பயணித்த 2 போலீஸ்காரர்கள் கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

8 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், கைதானவர்கள் கங்காராம் கோரக்நாத், மற்றும் ராகேஷ் பரிவார் மற்றும் ஒருவர் என தெரியவந்தது. இவர்கள் மீது தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 7 பேர் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

வழக்கின் இறுதி கட்ட விசாரணை நிறைவில், 2 பேர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனைத்தொடர்ந்து 2 பேருக்கும் தலா 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

-----


Next Story