உத்தவ் தாக்கரே கோர்ட்டை நாட வேண்டும்- காங்கிரஸ் கருத்து


உத்தவ் தாக்கரே கோர்ட்டை நாட வேண்டும்- காங்கிரஸ் கருத்து
x
தினத்தந்தி 18 Feb 2023 12:30 AM IST (Updated: 18 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மும்பை,

சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியிடம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்தது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், உத்தவ் தாக்கரே கோர்ட்டை நாட வேண்டும் காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுபற்றி மராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் நேற்று கூறியதாவது:-

எதிர்பார்த்த ஒன்று தான்

ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மை சிவசேனாவாக அங்கீகரித்த இந்தி தேர்தல் ஆணையத்தின் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான்.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பெரும்பான்மையை தேர்தல் ஆணையம் பரிசீலித்துள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவான வகையில் தேர்தல் ஆணையம் செயல்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

கோர்ட்டை நாட வேண்டும்

இருப்பினும் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு மாவட்ட மற்றும் தாலுகா மாவட்டத்தில் பரந்த அளவில் ஆதரவு உள்ளது. எனவே அவர் தேர்தல் ஆணையத்திற்கு முடிவு எதிராக தகுந்த மேல்றையீடு செய்து கோர்ட்டை நாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story