பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் வைக்க நடவடிக்கை- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு


பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் வைக்க நடவடிக்கை- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

மும்பை,

பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

எண்ணெய் வரி ரத்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் புனேயில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் அவர் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

பணவீக்கம் முக்கிய பிரச்சினை என்பதால் அது குறித்து நான் ஒவ்வொரு முறை கேள்வி எழுப்பப்படும் போதும் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். பணவீக்கத்தை ஒருபுள்ளியில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உதாரணமாக இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் வரி ரத்து செய்யப்பட்டது. இதனால் குறைந்த விலையில் நமது நாட்டுக்கு சமையல் எண்ணெய் கிடைக்கிறது.

உலக அளவில் பிரச்சினை

பணவீக்கம் பிரச்சினை உலக அளவில் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அமெரிக்கா சந்தித்து வருகிறது. ஜெர்மனி கடந்த 38 ஆண்டுகளில் சந்திக்காத பணவீக்கத்தை சந்தித்து உள்ளது. பணவீக்கத்தை 4 சதவீதத்திற்கு கீழ் வைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதேபோல பொது மக்களுக்கு நியாயமான விலையில், உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story