மும்பை மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு குலுக்கல்


மும்பை மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீடு குலுக்கல்
x

மும்பை மாநகராட்சியில் வார்டு இடஒதுக்கீட்டுக்காக வருகிற 31-ந் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மும்பை மாநகராட்சியில் வார்டு இடஒதுக்கீட்டுக்காக வருகிற 31-ந் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.

31-ந் தேதி குலுக்கல்

மும்பை மாநகராட்சி பதவி காலம் முடிந்தும் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் மற்றும் பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வார்டுகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த குலுக்கல் வருகிற 31-ந் தேதி வெளியிடப்படும்.

பட்டியல்

தேர்வு செய்யப்பட்ட இந்த வார்டுகள் பட்டியல் ஜூன் 1-ந் தேதி வெளியிடப்படும். அன்று முதல் 6-ந் தேதி வரை பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள், கருத்துகளை தெரிவிக்கலாம். இறுதி செய்யப்பட்ட இந்த வார்டுகள் பட்டியல் விவரம் ஜூன் 13-ந் தேதி கெஜட்டில் வெளியிடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இந்த வார்டு இடஒதுக்கீடு தொடர்பான குலுக்கல் நடைபெறாது என்றும் அந்த அதிகாரி கூறினார்.

1 More update

Next Story