அம்பேத்கர் கையால் எழுதிய புத்தகங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

அம்பேத்கர் கையால் எழுதிய புத்தகங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?- அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x

அம்பேத்கர் கையால் எழுதிய புத்தகங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

அம்பேத்கர் கையால் எழுதிய புத்தகங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சிறிய அறையில் புத்தகங்கள்

சட்டமேதை அம்பேத்கரின் புத்தகங்களை வெளியிடும் திட்டத்தை மாநில அரசு நிறுத்திவிட்டதாக வெளியான ஊடக செய்தியை அடிப்படையாக வைத்து, அதை மும்பை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து விசாரித்தது.

இந்த வழக்கில் கோர்ட்டு சார்பில் ஆஜரான வக்கீல் சுவராஜ் ஜாதவ், அம்பேத்கர், ஜோதிபாய் புலே ஆகியோர் கைகளால் எழுதப்பட்ட புத்தகங்கள் தென் மும்பையில் உள்ள பழமையான கட்டிடத்தில் சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பதில் அளிக்க உத்தரவு

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுதொடர்பான பதில் மனுவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஐகோர்ட்டு, அம்பேத்கர், ஜோதிபாய் புலேவின் கையால் எழுதப்பட்ட புத்தகங்களை பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்குமாறு கூறியது. மேலும் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

-------------

Next Story