ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பது ஏன்?- உத்தவ் தாக்கரேக்கு அதிருப்தி எம்.எல்.ஏ. பரபரப்பு கடிதம்


ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பது ஏன்?- உத்தவ் தாக்கரேக்கு அதிருப்தி எம்.எல்.ஏ. பரபரப்பு கடிதம்
x

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பது ஏன் என்பது குறித்து விளக்கி அதிருப்தி எம்.எல்.ஏ. சஞ்சய் சிர்சாட் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பது ஏன் என்பது குறித்து விளக்கி அதிருப்தி எம்.எல்.ஏ. சஞ்சய் சிர்சாட் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார்.

சந்திக்க முடியவில்லை

அவுரங்காபாத் மேற்கு தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ.வான சஞ்சய் சிர்சாட் தற்போது ஏக்நாத் ஷிண்டே முகாமில் உள்ளார். அவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இருப்பது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நேற்று வர்ஷா பங்களாவின் (முதல்-மந்திரி இல்லம்) கதவுகள் உண்மையில் பொது மக்களுக்காக திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் நாங்கள் சிவசேனாவின் எம்.எல்.ஏ.க்களாக இருந்த போதும், எங்களுக்கு வர்ஷா பங்களாவின் கதவுகள் பூட்டப்பட்டு தான் இருந்தது. உங்களை (உத்தவ் தாக்கரே) சுற்றி இருந்த கும்பல், உங்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. சந்திப்புக்காக வர்ஷா பங்களாவில் இருந்து அழைப்புகள் வந்தாலும், உங்களை சுற்றி இருந்த கும்பல் எங்களை பல நேரம் அங்கு காக்க வைத்தது. மேலும் உங்களை சுற்றி இருந்த கும்பல் எங்களின் போன் அழைப்புகளை எடுத்ததே இல்லை. மேலும் மந்திராலயாவுக்கு நீங்கள் வருவதில்லை என்பதால் அங்கு உங்களை சந்திக்கும் கேள்விக்கே இடமில்லை.

அவமானப்படுத்தப்பட்டோம்

3, 4 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிறகும் நாங்கள் ஏன் இவ்வாறு அவமானப்படுத்தப்பட வேண்டும்?. கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதித்ய தாக்கரேவுடன் அயோத்திக்கு செல்ல கூட அனுமதிக்கப்படவில்லை. ராமர் கோவில், அயோத்தி சிவசேனாவில் முக்கிய விஷயம் இல்லையா?. அப்போது ஏன் எங்களை ஆதித்ய தாக்கரேவுடன் செல்ல அனுமதிக்கவில்லை. அடிமட்ட சிவசேனா தொண்டன் நமது நிஜ எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எப்படி நம்மை மேம்பாட்டு பணிகளை செய்ய அனுமதிக்கும் என கேட்கிறான். ஆட்சியில் இருக்கும் போதே சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏன் ஓரங்கட்டப்படுகிறார்கள் என தொண்டர்கள், பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் கஷ்டப்பட்டோம். எங்களின் கடினமான நேரங்களில் ஏக்நாத் ஷிண்டேதான் எங்களுடன் இருந்தார். அதனால் தான் இன்று நாங்கள் அவரோடு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

--------------


Next Story