சாட்டிங் செய்ததை கணவர் கண்டித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை


சாட்டிங் செய்ததை கணவர் கண்டித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Sept 2023 12:45 AM IST (Updated: 3 Sept 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

சாட்டிங் செய்ததை கணவர் கண்டித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தானே,

சாட்டிங் செய்ததை கணவர் கண்டித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பெண் தற்கொலை

தானே மாவட்டம் டோம்பிவிலி டவுண் பகுதியை சேர்ந்தவர் கரண் சோலங்கி. இவருக்கு அண்மையில் பூஜா (வயது20) என்பவருடன் திருமணம் ஆனது. புதுமண தம்பதியான இவர்கள் உறவினர்களை பார்க்க சென்றனர். 10 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு கரண் சோலங்கி மனைவி பூஜாவை அழைத்து சென்றார். அப்போது யாரும் எதிர்பாராத தருணத்தில் பூஜா 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.

வாட்ஸ்அப் சாட்டிங்

இதனால் படுகாயமடைந்த பூஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பூஜா சில பேரிடம் வாட்ஸ்அப் சாட்டிங் செய்து வந்து உள்ளார். இதனை கணவர் கரண் சோலங்கி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பூஜா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.


Next Story