மந்திராலயா முன் பெண் விஷம் குடித்து தற்கொலை: பொதுமக்களை சந்திக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவு


மந்திராலயா முன் பெண் விஷம் குடித்து தற்கொலை: பொதுமக்களை சந்திக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மந்திராலயா முன் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவத்தை அடுத்து பொதுமக்களை சந்திக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

மந்திராலயா முன் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவத்தை அடுத்து பொதுமக்களை சந்திக்க அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.

பெண் விஷம் குடித்து தற்கொலை

மும்பையில் உள்ள மந்திராலயா (தலைமை செயலகம்) முன் கடந்த சில நாட்களுக்கு முன் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்ட சீத்தல் காடேகர் என்ற பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல கணவர் கால் இழக்க காரணமான டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவிமும்பையை சேர்ந்த சங்கீதா தாவ்ரே என்ற பெண்ணும் விஷம் குடித்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு தற்கொலை முயற்சி சம்பவமும் மந்திராலயா முன் நடந்து உள்ளது.

பொதுமக்களை சந்திக்க உத்தரவு

இந்தநிலையில் தலைமை செயலாளர் மனுகுமார் ஸ்ரீவட்சா உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மந்திராலயாவுக்கு குறைகள் அல்லது புகார் அளிக்க வரும் மக்களை அதிகாரிகள் தினந்தோறும் பிற்பகல் 3 முதல் 4 மணி வரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். இந்த நேரத்தில் கூட்டங்கள் எதையும் நடத்த வேண்டாம் என எல்லாதுறையினருக்கும் அறிவுறுத்துகிறேன். அதிகாரிகள் வாரத்தில் 2 நாட்கள் கண்டிப்பாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களை சந்திக்க வேண்டும். மக்களை சந்திப்பதற்கு முன்அதிகாரிகள் அவர்களின் கள வேலை, கூட்டங்களை முடிக்க வேண்டும்.

மந்திரிகளும் 2 வாரம் அல்லது மாதத்துக்கு ஒரு முறை பொது மக்களை சந்திக்கலாம். அதிகாரிகள், மந்திரிகள் பொதுமக்களை எந்த நேரத்தில் சந்திப்பார்கள் என்ற விவரம் அவர்களின் அலுவலகத்தில் வெளியில் எழுதி வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story