20-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

ராபோடியில் மதுபோதையில் 20-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் பலியனார்.
தானே,
தானே மாஜிவாடாவில் லோதா லக்சூரியா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் காதம்பரி தல்ரேஜா (வயது45). நேற்று இரவு 20-வது மாடியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த போது மது குடித்து உள்ளார். போதையில் இருந்த அவர் பால்கனிக்கு வந்தார். அப்போது கால் இடறி 20-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே அப்பெண் பலியானார்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது பால்கனியில் தடுப்புகள் இல்லாததால் தவறி விழுந்தது தெரியவந்தது.
Next Story






