தொழிலாளி பலி: இரும்பு ஆலை மேலாளர் மீது வழக்கு


தொழிலாளி பலி: இரும்பு ஆலை மேலாளர் மீது வழக்கு
x

தனியார் இரும்பு ஆலையில் தொழிலாளி பலி: இரும்பு ஆலை மேலாளர் மீது வழக்கு

வசாய்,

பால்கர் மாவட்டம் வாடா தாலுகா அபிட்கர் கிராமத்தில் தனியார் இரும்பு ஆலையில் கடந்த மாதம் 22-ந்தேதி இரவு 10 மணி அளவில் வேலை நடந்து கொண்டு இருந்தது. அப்போது கொதிகலனில் இருந்த இரும்பு உருகி கீழே விழுந்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். இதனால் காயமடைந்த தொழிலாளிகளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந்தேதி பலியானார். மற்ற 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த வாடா போலீசார் பாதுகாப்பு உபகரணமின்றி தொழிலாளிகளை பணியில் அமர்த்தியதாக நிறுவன மேலாளர் சித்தார்த்த குமார் மீது நேற்றுமுன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story