மகளிர் 3000 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றார்


மகளிர் 3000 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 8 July 2017 7:30 PM IST (Updated: 8 July 2017 7:30 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றுள்ளார்.

புவனேஷ்வர்,

22–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. 2–வது நாளில் 2 தங்கம் உள்பட 7 பதக்கங்களை இந்தியா அள்ளியது. 3–வது நாளான நேற்றும் இந்தியா மேலும் 4 தங்கப்பதக்கங்களை வென்று பிரமாதப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று 4-வது நாளாக நடைபெற்ற போட்டியில் மகளிர் 3000 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றார்.  இதனையடுத்து இந்தியா இது வரையில் 7 தங்கப்பதக்கம்வென்று முதல்-இடத்தில் உள்ளது.
1 More update

Next Story