உலக பேட்மிண்டன் போட்டி: வெண்கல பதக்கம் வென்றார் சாய்னா நேவல்


உலக பேட்மிண்டன் போட்டி: வெண்கல பதக்கம் வென்றார்  சாய்னா நேவல்
x
தினத்தந்தி 26 Aug 2017 3:09 PM GMT (Updated: 26 Aug 2017 3:09 PM GMT)

உலக பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவல் அரை இறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெண்கல பதக்கம் வென்றார்.

லண்டன்,

 23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் இந்திய வீராங்கனை லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேக்வால், 31-வது இடம் வகிக்கும் உள்ளூர் வீராங்கனை கிரிஸ்டி கில்மோரை எதிர்க்கொண்டார்.  

நேற்றை போட்டியில் சாய்னாவிற்கு ஸ்காட்லாந்து வீராங்கனை கிரிஸ்டி கில்மோர் சவலாக காணப்பட்டார். ஒரு மணி, 14 நிமிடங்கள் நீடித்த மரத்தான் ஆட்டத்தில் இரு வீராங்கனைகளும் அதிரடி காட்டினர். முதல் செட்டில் நெருக்கடிக்கு இடையே அதிரடியை காட்டிய சாய்னா 21-19 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். சாய்னா இதே வேகத்தில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றுவார் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

நேர்த்தியான ஆட்டம் மூலம் சவாலாக எழுந்த கிரிஸ்டி செட்டை 18-21 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் வெற்றியை நிர்ணயம் செய்யும் மூன்றாவது செட் நோக்கி பயணித்தது. அனுபவ வீராங்கனையான சாய்னா அடுத்தடுத்த புள்ளிகளை தன்வசமாக்கி 21-15 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி வெற்றியை தனதாக்கி, கிரிஸ்டியை வெளியேற்றினார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற  அரை இறுதி போட்டியில்  சாய்னா நேவல் மற்றும் ஜப்பானின் நொஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். இதில் மிக சிறப்பாக விளையாடிய சாய்னா நேவல் 21-12, 17-21, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 74 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் இறுதி வரை போராடிய சாய்னா நேவல் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.

Next Story