பிற விளையாட்டு

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள் + "||" + India's Twitterati go beserk after Hina Das clinches historic gold medal at IAAF Wolrd U-20 Athletics Championships

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்

சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்
சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்துள்ளார், இதற்கு ஜனாதிபதி - பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #IAAFWolrdU20
புதுடெல்லி 

பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார். 

இதற்கு முன் 2002 ல் சீமா புனியாவும், 2014 ல் நவஜீத் கவுர் தில்லானும் மட்டுமே இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.

ஹிமா தாஸ் பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் அடைந்துள்ளார். இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஹிமா புதிய வரலாறு படைத்துள்ளார். இவருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ., ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தடகள வீராங்கணை ஹிமா தாசால் இந்தியா மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை இளம் தடகள வீரர்கள் பலருக்கும் இனி வரும் காலங்களில் உத்வேகமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இது போல்  ஜனாதிபதி  ராம் நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ராஜ்யவர்தன் ரதோர், நடிகர்கள் அமிதாபச்சன், அக்‌ஷய் குமார் உள்பட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.அதிகம் வாசிக்கப்பட்டவை