சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்


சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை இல்லை; இந்திய வீராங்கனை  வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார்
x
தினத்தந்தி 30 July 2021 7:26 AM GMT (Updated: 30 July 2021 7:26 AM GMT)

பளு தூக்குதலில், தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றவராகவே நீடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள்  49 கிலோ எடைப் பிரிவில், புதிய ஒலிம்பிக் சாதனை படைத்த சீனாவின் ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார். அந்த போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில்  மீராபாய் சானு ஒலிம்பிக்கின் முதல் நாளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்,  கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை  ஆவார்

ஆனால், சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அவ்வாறு உறுதி செய்யப்பட்டால், அவரிடமிருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு, மீராபாய் சானுவுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், அப்படி சோதனை ஏதும் நடத்தப்படவில்லை. எனவே, இந்த குறிப்பிட்ட போட்டியில் பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் எவ்வித மாற்றமும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story