வெற்றிக்கு பிறகு வீரர்களை பிரதமர் அழைத்து பேசுவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் - பேட்மிண்டன் வீரர் ஷிராக் ஷெட்டி பெருமிதம்


Image Courtesy : ANI
x
Image Courtesy : ANI
தினத்தந்தி 18 May 2022 4:07 AM GMT (Updated: 18 May 2022 4:07 AM GMT)

தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது


தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது 

இதில்,இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

இறுதி போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை எதிர்கொண்டது.இதில்  இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 

இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் அணியின் அனைத்து  வீரர்களையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து இந்திய பேட்மிண்டன் ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த இரட்டையர் பிரிவு வீரரான ஷிராக் ஷெட்டி கூறியதாவது ;

ஒரு அணி வெற்றி பெற்றதும் வெற்றிக்கு பிறகு  பிரதமர் அந்த அணியை தொடர்பு கொண்டு பேசுவதை இதுவரை நான் பார்த்தது இல்லை. இது இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது .

இது எங்களை ஊக்கப்படுத்தி புதிய நிலைக்கு கொண்டுசென்றது. பிரதமர் தனது எங்களுக்காக நேரம் ஒதுக்கி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் என  தெரிவித்தார் 

Next Story