மாநில செய்திகள்

அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மக்கள் நலனுக்கு ஏற்புடையதல்ல இந்திய கம்யூனிஸ்டு கருத்து + "||" + To the Cabinet, to the governor Power struggle between

அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மக்கள் நலனுக்கு ஏற்புடையதல்ல இந்திய கம்யூனிஸ்டு கருத்து

அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மக்கள் நலனுக்கு ஏற்புடையதல்ல இந்திய கம்யூனிஸ்டு கருத்து
கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மக்கள் நலனுக்கு ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கருத்து தெரிவித்துள்ளது. புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூ

புதுச்சேரி,

கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மக்கள் நலனுக்கு ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

யூனியன் பிரதேச சட்டம்

புதுச்சேரியில் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையிலான அதிகார போட்டியால் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது மக்கள் நலனுக்கு ஏற்புடையதல்ல. அமைச்சரவை மக்கள் பிரதிநிதிகளால் ஏற்படுத்தப்பட்டது.

கவர்னர் மத்திய அரசு பிரதிநிதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். அரசில் சட்டமன்றம், நிர்வாக மன்றம், நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இதில் நிர்வாக மன்றத்தில் யார் அதிகாரம் செலுத்துவது என்ற போட்டி தற்போது ஏற்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் 1963–ம் ஆண்டு கொண்டுவந்த போது இந்தியாவில் 15 யூனியன் பிரதேசங்கள் இருந்தன. அதில் 8 மாநிலங்களாக மாறிவிட்டன. மீதியுள்ள 7–ல் டெல்லிக்கு தனி சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு யூனியன் பிரதேசங்களுக்கான சட்டம் பொருந்தாது. புதுச்சேரி மட்டுமே யூனியன் பிரதேச சட்டப்படி இயங்கி வருகிறது.

திருத்தம் கொண்டு வர வேண்டும்

தற்போதைய கவர்னர் கிரண்பெடி நிதி செலவினத்தை கண்காணிப்பதில் அவருக்கு மட்டுமே பொறுப்பு உள்ளதாக கூறியுள்ளார். நிதி செலவை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சரவைக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும், வாக்காளர்களுக்கும் உள்ளது. சட்டசபையில் அனுமதி இன்றி ஒரு பைசாவை கூட பெற முடியாது. கவர்னருக்கான நிதி உள்ளிட்ட அனைத்திற்கும் சட்டசபைதான் அனுமதி தருகிறது.

1963–ம் ஆண்டு 3 ஆயிரம் அரசு ஊழியர்களும், ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இருந்தனர். ஆனால் தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 10–க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உள்ளனர். எனவே அதற்கு தகுந்த மாதிரி யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

ஏற்க மாட்டோம்

1973–ம் ஆண்டு புதுச்சேரியில் கவர்னராக இருந்த சேத்திலால் தன்னிச்சையாக செயல்பட்டார். அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னர் வரம்பு மீறி செயல்பட கூடாது என்று கவர்னருக்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தை தற்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர், குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ராஜா, டெல்லி முதல்–அமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அனுப்பியுள்ளோம்.

தன்னிச்சையாக செயல்படும் கவர்னரை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். கவர்னரிடம் அதிகார தோரணையில் இருப்பது ஏற்புடையதல்ல. அவர்தான் புதுச்சேரியை காப்பாற்ற அவதரித்து வந்ததுபோல் கூறுவதை ஏற்க மாட்டோம். கவர்னரின் பல்வேறு பணிகளை பாராட்டுகின்றோம். ஆனால் நான்தான் சகலமும் என்பதை ஏற்கமாட்டோம். கவர்னரின் செயல்பாடுகள் குறித்து ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

இவ்வாறு விசுவநாதன் கூறினார். பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.