மாநில செய்திகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் + "||" + Humanist Party Urges People

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னரை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
காரைக்கால்,

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக செயல்படும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர்கள் பாதுஷா(தஞ்சாவூர்), அமீன்(மயிலாடுதுறை) மற்றும் யாகூப்(தாம்பரம்), தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அதிகாரி மீரான் மைதீன், மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர்முகமது, மாநில மாணவர் இந்தியா செயலாளர் நூர்தீன் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ஷாஜகான் வரவேற்றார். முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல்ரஹீம் நன்றி கூறினார்.

கூட்டத்தை தொடர்ந்து பொதுச்செயலாளர் அப்துல்சமது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கவர்னரை திரும்ப பெறவேண்டும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை வறட்சி மாநிலங்களாக அறிவிக்க வேண்டும். பயிர்கள் கருகியதால் வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தஞ்சாவூரில் வருகிற 19-ந் தேதி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள், விவசாய அமைப்புகள் மற்றும் தோழமை அமைப்புகளை அழைக்க உள்ளோம்.

புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்-அமைச்சரை செயல்பட விடாமல் தடுத்தும், அதிகாரிகளை மக்கள் நலப்பணியாற்ற விடாமல் தடுத்தும் புதுச்சேரி நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழ் நிலையை உண்டாக்கி வரும் கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட பொருளாளர் ராஜா முகமது, மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக்அலி, அக்பர்ஷா, காஜாமெய்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.