ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

மாநில செய்திகள்

சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி: தலைமறைவான தம்பதி தேடப்படும் குற்றவாளிகள் போலீஸ் அறிவிப்பு + "||" + Slip carrying Rs 60 lakh fraud

சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி: தலைமறைவான தம்பதி தேடப்படும் குற்றவாளிகள் போலீஸ் அறிவிப்பு

சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி: தலைமறைவான தம்பதி தேடப்படும் குற்றவாளிகள் போலீஸ் அறிவிப்பு
சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான தம்பதியை தேடப்படும் குற்றவாளிகளாக போலீசார் அறிவித்துள்ளனர். ரூ.60 லட்சம் மோசடி புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்தவர் பழனி(வயது 32). இவரது மனைவி அழகம்மாள்(28). இவர்கள் இருவரும் சீட்டு ந

புதுச்சேரி,

சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான தம்பதியை தேடப்படும் குற்றவாளிகளாக போலீசார் அறிவித்துள்ளனர்.

ரூ.60 லட்சம் மோசடி

புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்தவர் பழனி(வயது 32). இவரது மனைவி அழகம்மாள்(28). இவர்கள் இருவரும் சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் 40–க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வந்தனர். சீட்டு கட்டியவர்களுக்கு சரியாக பணத்தை திருப்பித் தராமல் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 19.12.2015 அன்று கணவன்–மனைவி இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் சீட்டு கட்டி ஏமாந்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்–மனைவி இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். 2 ஆண்டுகள் ஆனபோதிலும் இதுவரை அவர்களை பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை.

தேடுதல் வேட்டை தீவிரம்

இந்த நிலையில் பழனி மற்றும் அவரது மனைவி அழகம்மாளை தேடப்படும் குற்றவாளியாக மேட்டுப்பாளையம் போலீசார் அறிவித்து அவர்களது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். சப்–இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவரமாக நடத்தி வருகின்றனர்.