மாநில செய்திகள்

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் அமைச்சர் கந்தசாமி பேச்சு + "||" + BJP state to be sent home Continue the fight

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் அமைச்சர் கந்தசாமி பேச்சு

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை போராட்டம் தொடரும் அமைச்சர் கந்தசாமி பேச்சு
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் தொடரும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிர

புதுச்சேரி,

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் தொடரும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் தொகுதி வாரியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சி மேலிட ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஜோதி மிஸ்ரா தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, அரசு கெறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் தொடரும்

ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நமது பணத்தை எடுக்க கட்டுப்பாடு விதிப்பதற்கு என்ன அதிகாரம் உள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆண்டபோது நாட்டின் வளர்ச்சி 10 ஆண்டுகள் முன்நோக்கி சென்றது. தற்போது நாட்டின் வளர்ச்சி 20 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிட்டது.

புதுவையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், உயிரிழந்தவர்களுக்கு ஈமச்சடங்கிற்கு கூட நிதி அளிக்க முடியவில்லை. ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். மத்தியில் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசை வீட்டிற்கு அனுப்பும் வரை காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும்.

இவ்வாறு கந்தசாமி கூறினார்.

காமராஜ் நகர்

காமராஜ் நகர் தொகுதி சார்பில் 45 அடி ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் விக்டர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.