மாநில செய்திகள்

சமூக நலத்துறை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம் + "||" + Social Welfare Office Siege struggle with Disabilities

சமூக நலத்துறை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்

சமூக நலத்துறை அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்
புதுவையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை இந்த மாதம் முதல் வங்கிகள் மூலம் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்பதற்காக டாக்டர் அம்பேத்கர் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்க தலைவர் முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மால

புதுவையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை இந்த மாதம் முதல் வங்கிகள் மூலம் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து கேட்பதற்காக டாக்டர் அம்பேத்கர் மாற்றுத் திறனாளிகள் புரட்சி இயக்க தலைவர் முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாலை சமூகநலத்துறை இயக்குனர் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் மாற்றுத் திறனாளிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரியவந்ததும் மற்ற மாற்றுத் திறனாளிகள் திரண்டு வந்து சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து சமூகநலத்துறை இயக்குனர் மீனாகுமாரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் மாற்றுத்த்திறனாளிகள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். மாற்றுத் திறனாளிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் கந்தசாமியிடம் புகார் அளிக்க உள்ளனர்.