மாநில செய்திகள்

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார் + "||" + Science Fair Prizes for the best works

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்
புதுவையில் நடந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை வைத்து இருந்தவர்களுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் பரிசு வழங்கினார். அறிவியல் கண்காட்சி புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்

புதுவையில் நடந்த தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை வைத்து இருந்தவர்களுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் பரிசு வழங்கினார்.

அறிவியல் கண்காட்சி

புதுவை பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியை செல்லபெருமாள் பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடத்தின.

இந்த கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. கல்வித்துறை இயக்குனர் குமார் வரவேற்று பேசினார். விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

சிறு போட்டிதான்

சமீப காலமாக இருசக்கர வாகனத்தால் ஏற்படும் விபத்துகள் மத்திய, மாநில அரசுகளை கவலை கொள்ள செய்துள்ளது. இந்தநிலையில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனத்தை இயக்க முடியும் என்ற வகையிலான அமைப்பினை மாணவர்கள் உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர். அதேபோல் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி குப்பையை தரம் பிரிக்கக்கூடிய அமைப்பினையும் மாணவர் குழுவினர் வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சியில் வைத்திருந்த அறிவியல் படைப்புகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள 5 நாட்கள் போதாது. இந்த கண்காட்சியில் பரிசுபெற்றவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள் அல்ல. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள்தான் இந்த கண்காட்சியில் இடம்பெற்றனர். எனவே இது வெற்றிபெற்றவர்களுக்கு இடையே நடைபெற்ற சிறுபோட்டிதான்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குனர் குமார், புதுவை கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜு, கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.