மாநில செய்திகள்

சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது + "||" + Lifting the burden of worker Body

சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது

சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது
சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் 2 நாட்களுக்கு பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி சாவு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சதீஷ்

கண்டமங்கலம்,

சுமை தூக்கும் தொழிலாளியின் உடல் 2 நாட்களுக்கு பிறகு துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

சிகிச்சை பலனின்றி சாவு

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சதீஷ் (வயது 23). சம்பவத்தன்று அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் மின்கம்பம் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்மநபர்கள் சிலர் சதீஷ் அணிந்து இருந்த லுங்கியால் அவரது முகத்தை மூடி சரமாரியாக தாக்கினர். இதன்பின் அவரது உடலில் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

உடலில் தீக்காயம் அடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சதீசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 6–ந் தேதி இரவு சதீஷ் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பத்தின் அருகில் நின்று செல்போனில் பேசியபோது மின்கசிவு ஏற்பட்டு, அதினால் சதீஷின் உடலில் தீப்பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை வாங்க மறுப்பு

இந்நிலையில் 2017 புத்தாண்டு அன்று நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது பெரியபாபு சமுத்திரம், ரசபுத்திரபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சதீஷ் எரித்து கொல்லப்பட்டு உள்ளார் என்றும், அவரை எரித்து கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரியும், இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கிராம மக்கள் சாலைமறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலையாளிகளை கைது செய்யும் வரை சதீசின் உடலை வாங்கமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக சதீஷின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்படாத நிலையில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையில் சதீஷின் சாவு குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை

இதையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்ய சதீஷின் உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். ஆனால் கொலையாளிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி முன்னிலையில் 4 டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதில் தோல் மற்றும் உள்உறுப்புகளின் மாதிரிகள் பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டது.

இது குறித்து கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி கூறுகையில், மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் சதீஷ் இருந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இருப்பினரும் முழுமையான ஆய்வுக்கு பிறகே உண்மையான விபரம் தெரியும். சதீஷின் உடல் பதப்படுத்தப்பட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.