மாவட்ட செய்திகள்

உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது தா.பாண்டியன் குற்றச்சாட்டு + "||" + The federal government is working against the people T. Pandian indictment

உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது தா.பாண்டியன் குற்றச்சாட்டு

உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது தா.பாண்டியன் குற்றச்சாட்டு
மத்திய அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராக உள்ளது என்று தா.பாண்டியன் கூறினார். ஆண்டு விழா இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சோவியத் புரட்சி நூற்றாண்டு விழா, கட்சி உறுப்பினர்களின் குடும்ப சந்திப்பு, கட்சியின் 91–வது ஆண்டு தொடக்கவிழா புதுவை ஜெயராம் திருமண

புதுச்சேரி,

மத்திய அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராக உள்ளது என்று தா.பாண்டியன் கூறினார்.

ஆண்டு விழா

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சோவியத் புரட்சி நூற்றாண்டு விழா, கட்சி உறுப்பினர்களின் குடும்ப சந்திப்பு, கட்சியின் 91–வது ஆண்டு தொடக்கவிழா புதுவை ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா, மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். புதுவை மாநில செயலாளர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இயற்கையின் சோதனை

இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி இல்லை. 2017–ம் ஆண்டு துயரத்தோடு பிறந்தது. 2016–ம் ஆண்டு நம்மை சோதித்தது. இயற்கையின் சோதனை ஒருபுறம், மனிதனின் ஆணவம் ஒருபுறம் என உள்ளது.

120 கோடி மக்கள் வாழும் நாட்டில் நிர்வாகத்தை சரியாக நடத்த தெரியவில்லை. ரூபாய் நோட்டு அச்சடிப்பது என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. கருப்பு பணம் வைத்திருப்பவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. அதை கண்காணிக்க தனி இலாகா உள்ளது.

இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் 1 சதவீதம் பேர்தான் என்று கூறுகிறார்கள். அப்படியானால் மற்றவர்கள் எல்லாம் வரிகட்டவில்லையா? ஒவ்வொரு பொருட்கள் வாங்கும்போதும் அதற்குரிய வரியை அனைத்து தரப்பு மக்களும் செலுத்துகின்றனர்.

நாகரீகத்தை அழிப்பது...

கடந்த நவம்பர் மாதம் 8–ந்தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினை பிரதமர் அறிவித்தார். அதன்பின் இந்த பிரச்சினை தொடர்பாக 60 நாட்களில் 55 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதனால் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டையும், தமிழர் நாகரீகத்தையும் அழிப்பதும், அவமானப்படுத்துவதுதான் நரேந்திர மோடி அரசின் வேலையாக உள்ளது.

உழைக்கும் மக்களுக்கு எதிரான அரசு

தமிழர்கள் பாரம்பரியமாக ஏறுதழுவுதல் போட்டியை நடத்தி வருகிறார்கள். இந்த ஏறுதழுவுதல் போட்டியில் வெல்லும் ஆண்மகனைத்தான் பெண்கள் விரும்பி மணந்தார்கள். தமிழர்களின் பாரம்பரியம் தெரியாதவர்கள் இதை தடுக்கப் பார்க்கிறார்கள். இதுதொடர்பான வழக்கு 4 வருடங்களாக நடக்கிறது.

தமிழர்களின் கலாசாரத்தின் ஆணிவேரை அறுப்பது, சமஸ்கிருதத்தை திணிப்பது என உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.