மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம் + "||" + Demanding jallikattu Students picket rail

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். ரெயில் மறியல் போராட்டம் பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறையில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அ

புதுச்சேரி,

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

ரெயில் மறியல் போராட்டம்

பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறையில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. இதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடை கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

மாணவர் கூட்டமைப்பு தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பொதுச்செயலாளர் முருகன், செயலாளர் பாலாஜி, ரமேஷ் உள்பட அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் 20–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேற்று காலை புதுவையில் இருந்து திருப்பதி புறப்படத் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் என்ஜினின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

தள்ளுமுள்ளு

இதுபற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மாணவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.