ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் | ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் மீண்டும் மார்ச் 8ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு | லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிப்பது தொடர்பாக மார்ச்.1ஆம் தேதி ஆலோசனை - மத்திய அரசு | முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள் - தினகரன் | திருவண்ணாமலையில் 3 ஸ்கேன் மையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு | முதல்வர் தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை - எச்.ராஜா |

மாவட்ட செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆன தமிழக மீனவர்கள் 51 பேர் காரைக்கால் வந்தனர் + "||" + From Sri Lanka prison Fishermen were released Came Karaikal

இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆன தமிழக மீனவர்கள் 51 பேர் காரைக்கால் வந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆன தமிழக மீனவர்கள் 51 பேர் காரைக்கால் வந்தனர்
இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆன தமிழக மீனவர்கள் 51 பேர், நேற்று காரைக்கால் வந்தனர். இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்
காரைக்கால்,

இலங்கை சிறையில் இருந்து விடுதலை ஆன தமிழக மீனவர்கள் 51 பேர், நேற்று காரைக்கால் வந்தனர். இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் விவசாயிகளை போன்று மீனவர்களும் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும் என்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் வேதனை தெரிவித்தார்.

மீனவர்கள் சிறை பிடிப்பு

கடந்த டிசம்பர் மாதம் 20, மற்றும் 21-ந் தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இருந்தனர்.

அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 51 பேரையும் வெவ்வேறு தினங்களில் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைத்தனர்.

விடுதலை

இந்நிலையில், கடந்த 2-ந் தேதி நடைபெற்ற இந்திய- இலங்கை ஆகிய இருநாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையின்போது கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்த இலங்கை அரசு, மீனவர்களை விடுவிக்கும்படி அந்த நாட்டு நீதித்துறைக்கு பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் மற்றும் பாம்பன் மீனவர்கள் 5 பேர்களை தலைமன்னார் கோர்ட்டும், ராமேஸ்வரம் மீனவர்கள் 15பேர், தங்கச்சி மடம் மீன வர்கள் 12 பேர், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 7 பேர் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 5 பேர் ஆக மொத்தம் 39 பேர்களை ஊர்க்காவல்துறை கோர்ட்டும் கடந்த 6-ந் தேதி விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட 51 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காரைக்கால் வந்தனர்

இந்நிலையில், 51 மீனவர் களையும் நேற்று காலை காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற் படையினர் தங்களது ரோந்து கப்பலில் அழைத்து வந்து மதியம் 12 மணியளவில் கோடியக்கரை அருகே சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர். 51 மீனவர் களும் இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ‘சாகர்’ ரோந்து கப்பல் மூலம் நேற்று மாலை காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் கடலோர காவல் படையினரும், காரைக்கால் மற்றும் தமிழக காவல்துறையினரும் விசாரணை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தற்கொலைதான் தீர்வு

விடுதலையான மீனவர்களை அழைத்துச் செல்ல வந்த ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் எமரிட், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா ஆகியோர் கூறியதாவது:-

நாங்கள் இந்திய எல்லைக் குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி எங்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். இது என்ன நியாயம்? என்று தெரியவில்லை. கைது செய்த மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அரசாங்கம், அந்த மீனவர்களின் விசைப் படகையும் சேர்த்து விடுவிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் மீனவர்களை மட்டும் விடுவித்து விட்டு படகுகளை விடுவிக்காமல் உள்ளது. ஒவ்வொரு விசைப்படகும் சுமார் 25 முதல் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை. இலங்கை அரசிடம் படகுகளை பறிகொடுத்து விட்டு கடனாளியாக நிற்க வேண்டிய நிலை உள்ளது. இப்படியே போனால் விவசாயிகளை போன்று மீனவர்களும் தற்கொலை செய்து கொண்டு சாவதை தவிர வேறு வழி இல்லை. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்புஅளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.