மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் பரவுவதால் வீட்டு தோட்டங்களில் தண்ணீரை தேக்கி வைக்காதீர்கள் கலெக்டர் வேண்டுகோள் + "||" + Water in the home gardens Do not hold back

டெங்கு காய்ச்சல் பரவுவதால் வீட்டு தோட்டங்களில் தண்ணீரை தேக்கி வைக்காதீர்கள் கலெக்டர் வேண்டுகோள்

டெங்கு காய்ச்சல் பரவுவதால்
வீட்டு தோட்டங்களில் தண்ணீரை தேக்கி வைக்காதீர்கள் கலெக்டர் வேண்டுகோள்
டெங்கு காய்ச்சல் பரவுவதால் வீட்டு தோட்டங்களில் தண்ணீரை தேக்கி வைக்காதீர்கள் என்று கலெக்டர் கேசவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கொம்யூன் குரும்பகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ‘சுத்தமான காரைக்கால் பசுமையான காரைக்கால்’ இயக்கத்தின் கீழ் தூய்மைப்பணி நடைபெற்றது.

இதனை மாவட்ட கலெக்டர் கேசவன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வீட்டு தோட்டங்களில் தண்ணீரை தேக்கி வைக்காதீர்கள். அங்கு டெங்குவை உருவாக்கும் கொசு அதிகளவில் காணப்படும். இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. தோட்டத்தில் குறிப்பிட்ட அளவு பள்ளம் தோண்டி அதில் செங்கல் ஜல்லிகளை கொட்டி தேங்கி நிற்கும் நீரை அதில் விட்டால் தண்ணீர் பூமிக்குள் போய்விடும்.

நமது கடமை

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. எனவே நீர்நிலைகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை போட்டு அசுத்தப்படுத்தக் கூடாது. வாரம் ஒருமுறையாவது இப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுத்தம் செய்து உங்கள் ஊரை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தூய்மைப்பணியில் உள்ளாட்சித்துறை துணை இயக்குனர் மகாலிங்கம் மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களும், பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.