மாவட்ட செய்திகள்

முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பத்ம விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்ய ஆலோசனை + "||" + chief-Minister Narayanasamy Headed Recommend Consulting eligible for Padma Award

முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பத்ம விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்ய ஆலோசனை

முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பத்ம விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்ய ஆலோசனை
பத்ம விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்வதற்கான ஆலோசனை கூட்டம் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.

புதுச்சேரி,

சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருதுகளை பெற தகுதியானவர்களை மாநில அரசுகள் பரிந்துரை செய்யவேண்டும். அவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த பத்ம விருதுகளை பெற புதுவை அரசு சார்பில் பரிந்துரை செய்ய தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் காபினெட் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ராதாகிருஷ்ணன் எம்.பி., தலைமை செயலாளர் மனோஜ்பரிதா, செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் 27 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் ஒரு சில விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.