மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் தனியார் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: 767 மாணவர்கள் அதிரடியாக நீக்கம் + "||" + in Puducherry Student enrollment in the private medical malpractice 767 students were severely dismissed

புதுச்சேரியில் தனியார் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: 767 மாணவர்கள் அதிரடியாக நீக்கம்

புதுச்சேரியில் தனியார் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: 767 மாணவர்கள் அதிரடியாக நீக்கம்
புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்ட 767 மாணவர்களை கல்லூரிகளை விட்டு நீக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, செப்.14-

புதுவை மாநிலத்தில் 4 நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களும், 3 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன.

இந்த கல்லூரிகளில் 2016-17-ம் ஆண்டு மொத்தம் 1,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தது. இந்த இடங்களுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு புதுச்சேரி அரசு விலக்கு பெற்று இருந்தது. இதனால் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடாக பெறப்பட்ட 283 இடங்களில் மட்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் 4 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 3 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டிய 767 இடங்களும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பாததுடன், 30.09.2016-க்குள் மாணவர் சேர்க்கைகளை முடிக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறையையும் மீறி சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 7-ந் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதனை புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, தலைமை செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர், புதுவை பல் கலைக்கழக பதிவாளர், அனைத்து தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மற்றும் சென்டாக் அலுவலகத்திற்கும் அனுப்பியுள்ளது.

அதில், “2016-17-ம் ஆண்டில் சென்டாக் கலந்தாய்வு மூலம் இல்லாமலும், 30.09.2016-ம் தேதிக்குப் பின்னரும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களை 2 வார காலத்திற்குள் வெளியேற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களை நீக்க வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் தெரிவித்து இருப்பதை அறிந்த நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கும், மன உளைச் சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதன் மூலம் 767 மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.