மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை + "||" + in Puducherry Complete blockage fight wins

புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை

புதுச்சேரியில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி - அமைச்சர் நமச்சிவாயம் அறிக்கை
புதுவையில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தி சாமானிய மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நரேந்திரமோடி தலைமையிலான மக்கள் விரோத பாரதீய ஜனதா அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

இந்த போராட்டத்தை வெற்றியடைய செய்த புதுவை மாநில மக்களுக்கும், வியாபார பெருமக்களுக்கும், தனியார் பஸ் உரிமையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கும், ஆட்டோ, டாக்சி தொழிலாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஒன்றுபட்ட பின்தங்கியோர் குடியரசு கட்சி, மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுக்கும், புதுவைபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கன்னியகோவில் பகுதியில் மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டிகளுடன் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் புதுவை– கடலூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
2. நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா
நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மின்வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா
மின்வாரியத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த பணியாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கவர்னர் மாற்றப்படுவார். மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மக்களின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் நம்பிக்கை தெரிவித்தார்.
5. அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனுக்கும் முதல்–அமைச்சர் ஆகும் தகுதி உண்டு எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தொண்டனுக்கும் முதல்–அமைச்சர் ஆகும் தகுதி உண்டு என்று திருக்கோவிலூர் அருகே நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.