மாவட்ட செய்திகள்

கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல் + "||" + Ocean ice cream Turvara Fishermen scream road

கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்

கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்
கடல் முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி புதுச்சேரியில் மீனவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,

புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் மீண்டும் உருவாகியுள்ளன. இதன் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் விசைப் படகுகள் இந்த மணல் திட்டுகளில் சிக்கி சேதமடைந்து வருகின்றன.


எனவே மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மரப்பாலம் சந்திப்பில் மீனவர்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பாம்பனில் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி, மணிசிங்கி இறால் மீன்கள்
பாம்பனில் மீனவர்களின் வலையில் சிக்கிய விலை உயர்ந்த கிளி,மணிசிங்கி இறால் மீன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
2. சுனாமியை மிஞ்சிய ‘கஜா’ புயல் அதிராம்பட்டினம் மீனவர்கள் கண்ணீர்
‘கஜா’ புயல் சுனாமியை மிஞ்சி விட்டதாக அதிராம்பட்டினம் மீனவர்கள் கண்ணீருடன் கூறுகிறார்கள். அதிராம்பட்டினம் பகுதியில் வீடுகள் சேற்றின் கூடாரமாக காட்சி அளிக்கின்றன. நிவாரண முகாம்களில் கிராம மக்கள் தவித்து வருகிறார்கள்.
3. புயல் கரையை கடந்ததால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
கஜா புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
4. கஜா புயல் பாதிப்பு உள்ளதா? என பார்வையிட வந்த கண்காணிப்பு அதிகாரியிடம் மீனவர்கள் வாக்குவாதம்
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையத்தில் புயல் பாதிப்பு உள்ளதா? என பார்வையிட வந்த கண்காணிப்பு அதிகாரியிடம் மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
5. இலங்கையில் விடுதலையான 28 மீனவர்கள் இன்று மதுரை வருகை
இலங்கையில் விடுதலையான 28 மீனவர்கள் இன்று மதுரை வருகிறார்கள்.