மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை + "||" + Ambedkar statue the flowers Honor the leaders

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை
அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி,

அம்பேத்கரின் நினைவு தினம் புதுவை அரசு சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன் உள்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து கடற்கரை சாலைக்கு நடந்து சென்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து புதுவை சட்டசபை எதிரே உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ராஜவேலு, தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு உள்பட என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாராமன், நடராஜன், நிர்வாகிகள் கணேசன், நாகமணி, அன்பானந்தம், ஞானவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க.வினர் தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, நிர்வாகிகள் அமுதாகுமார், சண்.குமாரவேல், சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்தனர். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், கவுரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பா.ம.க.வினர் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் துணைத்தலைவர் சத்தியநாராயண ரெட்டியார், நிர்வாகிகள் ஜெயபால், சிவராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாதானூர் பேட்டில் தொகுதி பொருளாளர் பாண்டுரங்கன் தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் குப்புசாமி, நிவாஸ், சசி, சுப்ரமணி, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் சலீம் தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், புதிய நீதிக்கட்சியினர் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும், அம்பேத்கர் தொண்டர் படையினர் தலைவர் பாவாடைராயன் தலைமையிலும், புதுச்சேரி ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் தலைவர் அருள்தாஸ் தலைமையிலும், அருந்ததியர் மக்கள் சங்கத்தினர் பொதுச்செயலாளர் தவமணி தலைமையிலும், பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர் மாநில தலைவர் ராம்குமார் தலைமையிலும், ஆதிதிராவிடர் விடுதலை இயக்கத்தினர் தலைவர் வரத.காளிதாஸ் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அம்பேத்கர் தேசிய விருதாளர்கள் சங்கத்தினர் தலைவர் முருகையன் தலைமையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் நோணாங்குப்பத்தில் தலைவர் ராமு தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள சிலைக்கு கல்வி ஆய்வியல் மற்றும் கிராம புனரமைப்பு இயக்ககத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பதிவாளர் சசிகாந்ததாஸ், நிதி அதிகாரி பிரகாஷ், துணை பதிவாளர் முரளிதரன், செயற்பொறியாளர் சங்கரமூர்த்தி, மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.