மாவட்ட செய்திகள்

பத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல் + "||" + Department of Securities Digitalization Governor Kiran Bedi Instruction

பத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்

பத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
பத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி உடனிருந்து துறையின் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி, பத்திரப்பதிவுத்துறையின் நுழைவு பகுதியில் அங்கு வருபவர்களுக்கு உதவிடும் விதமாக ஹெல்ப் டெஸ்க் அமைக்க உத்தரவிட்டார். துறையின் பல்வேறு செயல்பாடுகளை பொதுசேவை மையம் மூலம் பெற ஆன்லைன் சேவையை தொடங்க அறிவுறுத்தினார்.

துறையின் அனைத்து சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொண்டார். துறையில் உள்ள கோப்புகளை பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் உதவியுடன் டிஜிட்டல் மயமாக்க வலியுறுத்தினார். சார்-பதிவாளர்களின் திறனை மேம்படுத்த தற்போதைய சட்டங்கள், விதிகள், அரசு உத்தரவுகள் குறித்து அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை