மாவட்ட செய்திகள்

புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை + "||" + The AIADMK leadership will take good decision on the coalition in pondichery

புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை

புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ. நம்பிக்கை
புதுவையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை நல்ல முடிவினையே எடுக்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் புதிய வரிகள் எதையும் விதிக்காமல் அருமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் புதுவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. கவர்னர், முதல்–அமைச்சர் இடையேயான மோதல்போக்கின் காரணமாக கடந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இன்னும் முடித்து வைக்கப்படாமல் உள்ளது.

சட்டசபை விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் இடைக்கால பட்ஜெட் போடாமல் முழு பட்ஜெட்டையும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் சட்டசபையின் மாண்புகளை சீர்குலைக்கக்கூடாது.

எத்தனையோ கட்சிகள் அ.தி.மு.க.வோடு கூட்டணி அமைக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமி அ.தி.மு.க.வோடு கூட்டணி தொடர்கிறது என்று கூறியுள்ளார். அவரது கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் என்று அவரது எண்ணத்தை கூறியுள்ளார். அது அவரின் தனிப்பட்ட கருத்து. கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தலைமை முடிவெடுக்கும்.

எங்கள் கட்சி தலைமை என்ன முடிவு செய்தாலும் அதை புதுவை அ.தி.மு.க. ஏற்கும். தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப எங்கள் தலைமை நல்ல முடிவினையே எடுக்கும். எங்கள் கட்சியின் கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று அவரது கருத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரையே தமிழக மக்களுக்காக முடக்கி வரலாறு படைத்துள்ளனர். புதுவையில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி என்ன செய்துவிட்டோம் என்று ஓட்டு கேட்கும்?

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அ.தி.மு.க.வினர் கட்சி தலைமை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
2. அ.தி.மு.க.வை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள்; உட்கட்சி விவகாரம் பற்றிய கேள்விக்கு தமிழிசை பதில்
அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்து பதிலளித்தால் அக்கட்சியை பா.ஜ.க. இயக்குகிறது என கூறுவார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
3. கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளரின் கார், ஆட்டோவுக்கு தீவைப்பு; 4 பேரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி
கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளருக்கு சொந்தமான கார், ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் அவரது தம்பி உள்பட 4 பேரை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4. ‘அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது’ அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பப்படியே கட்சியும், ஆட்சியும் நடந்து வருகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
5. சென்னையில் வரும் 12ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
சென்னையில் வருகிற 12ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை