மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு + "||" + Congress party's election manifesto In the midst of the change of regime change - Minister Namasivayam

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
வில்லியனூர்,

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் நேற்று இறுதிகட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். வில்லியனூர் தொகுதி முத்துப்பிள்ளை பாளையத்தில் காலை 8 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் ஜி.என்.பாளையம், சுல்தான்பேட்டை, மணவெளி, ஒதியம்பட்டு, கொம்பாக்கம், ஆத்துவாய்க்கால்பேட், உத்திரவாகிணிபேட், எஸ்.எஸ்.நகர், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.


பிரசாரத்தின் போது அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

புதுவை மாநிலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க, மாநிலம் வளர்ச்சி பெற, தனிமாநில அந்தஸ்து கிடைக்க, அடித்தட்டு மக்கள் வளர்ச்சியடைய கை சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நமது வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றிபெற்றால்தான் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும்.

கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு நலத்திட்டங்களையும் பெரும் போராட்டத்துக்கு பின் தான் நிறைவேற்ற முடிந்தது. அப்படி இருந்தும் வில்லியனூர் தொகுதியில் பல கோடி ரூபாய்க்கு சாலை, குடிநீர் தொட்டிகள், மார்க்கெட் கட்டிடம் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இலவச அரிசிக்கு நீதிமன்றத்தை நாடி தேர்தல் முடிந்தவுடன் வழங்க உத்தரவு பெற்றுள்ளோம். வேலைவாய்ப்பு மட்டுமே தரமுடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் முடிந்து பின், அதற்கு தடையாக உள்ள கவர்னருக்கு முடிவு கட்டிவிட்டு, முதல் வேலையாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மத்தியில் ஆட்சிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையே திருப்புமுனை.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா எங்கள் கட்சியினரின் செயல்பாட்டை முடக்குகிறார்கள்; காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினர் எங்கள் செயல்பாட்டை திட்டமிட்டு முடக்குகிறார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் குற்றம்சாட்டினார்.
2. காங்கிரசுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ்.சிடமிருந்து தேசபக்தி சான்றிதழ் தேவையில்லை -மன்மோகன் சிங்
பாஜக தலைமையிலான மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகள் மக்கள் சார்ந்த கொள்கைகளை எடுக்க விரும்பவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.
3. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர்- ஜாலப்பா வீடுகளில் வருமானவரி சோதனை மருத்துவக் கல்லூரிகள் உள்பட 30 இடங்களில் 100 அதிகாரிகள் நடத்தினர்
காங்கிரஸ் மூத்ததலை வர்களான பரமேஸ்வர், ஜாலப்பா ஆகியோரின் மருத்துவகல்லூரிகள், வீடு-அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் 100 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
4. ரபேல் விமானத்துக்கு பூஜை: விமர்சனம் செய்த காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம்
ரபேல் விமானத்துக்கு பூஜை செய்த விவகாரத்க்தில் எதை விமர்சிக்க வேண்டும், எது விமர்சிக்க கூடாது என்பதை சிந்திக்க வேண்டும் காங்கிரசுக்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5. காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்; தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார்
காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் எதிர்க்கட்சியினர் புகார் அளித்தனர்.