மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை அளித்ததாக புகார்:ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 6 மாத குழந்தை பரிதாப சாவுபெற்றோர், உறவினர்கள் முற்றுகை + "||" + Complain against wrong treatment: 6 month old child deaths at Jipmer Hospital The siege of parents and relatives

தவறான சிகிச்சை அளித்ததாக புகார்:ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 6 மாத குழந்தை பரிதாப சாவுபெற்றோர், உறவினர்கள் முற்றுகை

தவறான சிகிச்சை அளித்ததாக புகார்:ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 6 மாத குழந்தை பரிதாப சாவுபெற்றோர், உறவினர்கள் முற்றுகை
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 6 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி பெற்றோர், உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, 

விழுப்புரம் விக்கிரவாண்டியை அடுத்த மதுரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பானு (வயது25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் 3-வதாக பானுவுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கதிர்வேல் என பெயர் சூட்டினர்.

அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் கடந்த 7-ந் தேதி புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் நேற்று இரவு அந்த குழந்தை திடீரென உயிரிழந்தது.

இதுகுறித்து அறிந்து குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர்களின் தவறான சிகிச்சையே குழந்தை இறந்ததற்கு காரணம் என்று கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கோரிமேடு போலீசார் அங்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களது சமரசத்தை ஏற்க மறுத்து சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...