மாவட்ட செய்திகள்

ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரி தூர்வாரும்பணி; அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு + "||" + At Rs 63 lakh Korkkatu Lake Dredged work; Minister Kandasamy studied in live

ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரி தூர்வாரும்பணி; அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு

ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரி தூர்வாரும்பணி; அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு
கோர்க்காடு ஏரி ரூ.63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார்.
வில்லியனூர்,

புதுவை மாநிலத்தில் 84 ஏரிகள் உள்ளன. மத்திய அரசு நிதி மூலம் இந்த ஏரிகள் தூர் வாரப்படுகிறது. இதுவரை 17 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி சுற்றுலா தலம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


இதைத்தொடர்ந்து ரூ.63 லட்சம் செலவில் கோர்க்காடு ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சுற்றுலா தலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று அமைச்சர் கந்தசாமி அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இது தொடர்பாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயலர் பார்த்திபன், தலைமை பொறியாளர் சிவலிங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை பொறியாளர் காளமேகம் சுற்றுலா துறை இயக்குனர் முகமது மன்சூர், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் உடனடியாக ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும்படி உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பணிகளை துரிதப்படுத்தவும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட சொன்னார். தொடர்ந்து பொதுப்பணித்துறை செயலர் பார்த்திபன் கூறுகையில், நீர்நிலைகளை பாதுகாக்க இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அதனை முழுமையாக பயன்படுத்தி நிலத்தடி நீரை உயர்த்தவும், மழை நீரை சேமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒரு வாரத்திற்குள் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின் போது ஊர் பொதுமக்கள் சார்பில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொறாமையால் முதல்-அமைச்சர் மீது விமர்சனம்: மக்களின் நலன் மீது மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை அமைச்சர் பேட்டி
பொறாமையால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்வதாகவும், மக்களின் நலன் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் சேலத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
2. 2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
2021 சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பயணம் தொடரும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
3. நெடும்பலத்தில் ரூ.49 லட்சத்தில் விதை சேமிப்பு கிடங்கு-அலுவலக கட்டிடங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்
நெடும்பலத்தில் ரூ.49 லட்சம் மதிப்பிலான விதை சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலக கட்டிடங்களை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.
4. தமிழகத்தில் இந்தி புகுந்து விட்டதாக கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டி விடுகிறது அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் இந்தி புகுந்து விட்டதாக கூறி தி.மு.க. போராட்டத்தை தூண்டி விடுகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.
5. தோவாளையில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
தோவாளையில் ரூ.20 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.