மாவட்ட செய்திகள்

100 அடி சாலையில் தடுப்புக் கட்டைகளை அகற்ற கோரி திடீர் மறியல் + "||" + 100 feet road Stir for Demand to remove the barrier

100 அடி சாலையில் தடுப்புக் கட்டைகளை அகற்ற கோரி திடீர் மறியல்

100 அடி சாலையில் தடுப்புக் கட்டைகளை அகற்ற கோரி திடீர் மறியல்
புதுவை 100 அடி சாலையில் தடுப்பு சுவரை மறித்து வைக்கப்பட்ட தடுப்புக் கட்டைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டு அவற்றை அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரில் வாகனங்கள் திரும்பக் கூடிய அளவுக்கு இடைவெளி விடப்பட்டு இருந்தது. இதை என்ஜினீயர்ஸ் காலனி, ஜெயமூர்த்தி நகர், ஜெயா நகர், ஆசிரியர் காலனி, திருப்பூர் குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த இடைவெளி பகுதியில் தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டு வழி அடைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தூரம் சென்று சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது.


இதனால் 100 அடி சாலையில் தடுப்பு சுவர் பகுதியில் இருந்த இடைவெளியை மறைத்து வைக்கப்பட்ட தடுப்புக்கட்டைகளை அப்புறப்படுத்த வேண்டுமென காவல் துறைக்கு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவை அப்புறப்படுத்தப்படாமல் இருந்தன. இந்தநிலையில் அந்த தடுப்புக்கட்டைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று காலை 100 அடி சாலையில் திடீரென பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்புக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதன்பின் போக்குவரத்து சீரானது.

தொடர்புடைய செய்திகள்

1. மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திருச்சியில் மறியல் போராட்டம் 1,140 பேர் கைது
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் 1,140 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து மறியல்; தள்ளுமுள்ளு
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதை கண்டித்து மறியல் நடந்தது.
3. ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி 10-ந் தேதி மறியல் போராட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலியை உயர்த்தக்கோரி வருகிற 10-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியல் போராட்டம் கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்
கால்வாய்களை தூர்வாரக்கோரி ஈத்தாமொழி புதூர் சந்திப்பில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
5. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்-ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, கரூர் பஸ் நிலையம் அருகே, மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...