மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டில் கொலுசு மாயம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை + "||" + Fear of police investigation suicide of the young man, Neighboring home Anklet Magic

பக்கத்து வீட்டில் கொலுசு மாயம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

பக்கத்து வீட்டில் கொலுசு மாயம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
பக்கத்து வீட்டில் கொலுசு மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பார்கள் என பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புதுச்சேரி,

புதுவை முத்திரையர்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளி. இவருடைய மனைவி பாகேஸ்வரி (வயது 41). இவர்களுடைய மகன் தினகரன் (வயது 20). கட்டிடத் தொழிலாளி. இவர் மீது கோரிமேடு போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது.

இந்தநிலையில் தினகரன் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீட்டில் கொலுசு மாயமானதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்கள் தினகரன் மீது போலீசில் புகார் அளிக்க இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கொலுசு மாயமான விவகாரம் தொடர்பாக போலீசார் தன்னை விசாரணைக்கு அழைப்பார்களோ என்று பயந்துபோய் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தினகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினகரன் தற்கொலை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாதவரத்தில் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை
சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
2. உயர் அதிகாரியுடன் மோதலால் மாயமான கேரள போலீஸ் இன்ஸ்பெக்டர் கரூரில் மீட்பு
உயர் அதிகாரியுடன் மோதலால் மாயமான கேரள போலீஸ் இன்ஸ்பெக்டர் கரூரில் மீட்கப்பட்டார்.
3. குத்தாலத்தில் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை மனைவியின் தம்பி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை
குத்தாலத்தில், கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர் பாக மனைவியின் தம்பி உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. மதுரையில் பரிதாபம்: கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை
சிலிண்டரில் உள்ள கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
5. ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது பயங்கரவாத தாக்குதல் : 11 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை