மாவட்ட செய்திகள்

நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் நடந்த சம்பவம்: என்னை அடித்து துன்புறுத்தியதால் வாலிபரை கொலை செய்தேன், கைதான தொழிலாளி வாக்குமூலம் + "||" + At the Nellipoptu Market I killed the young man because he beat me, Arrest worker Confessions

நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் நடந்த சம்பவம்: என்னை அடித்து துன்புறுத்தியதால் வாலிபரை கொலை செய்தேன், கைதான தொழிலாளி வாக்குமூலம்

நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் நடந்த சம்பவம்: என்னை அடித்து துன்புறுத்தியதால் வாலிபரை கொலை செய்தேன், கைதான தொழிலாளி வாக்குமூலம்
நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் தலையில் கல்லை தூக்கிப் போட்டு வாலிபரை கொலை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தினமும் அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக போலீசில் அவர் வாக்குமூலம் அளித்தார்.
புதுச்சேரி,

புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 35). இவர் நெல்லிதோப்பு மார்க்கெட்டில் கோழிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்தார். அதே மார்க்கெட்டில் காய்கறி கடை ஒன்றில் எல்லைப்பிள்ளைசாவடியை சேர்ந்த தேவநாதன் (42) வேலை பார்த்தார். இருவருக்கும் திருமணமாகவில்லை.


இவர்கள் இருவரும் சேர்ந்து தினமும் இரவில் மது குடிப்பதும் சண்டை போட்டுக்கொள்வதும் வழக்கம். அதன்படி கடந்த 8-ந்தேதி இரவும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதன்பின் தமிழ்வாணனும், தேவநாதனும் அங்கேயே தூங்கினர்.

இந்தநிலையில் அதிகாலையில் எழுந்த தேவநாதன் தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்வாணனை பார்த்ததும் ஆத்திரமடைந்தார். உடனே அவர் அங்கு கிடந்த கல்லை தூக்கி தமிழ்வாணனின் தலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து செத்தார்.

மார்க்கெட்டில் நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை 100 அடி சாலையில் உள்ள மதுக்கடையில் தேவநாதனை கைது செய்தனர்.

போலீசில் தேவநாதன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நானும், தமிழ்வாணனும் நண்பர்களாக இருந் தோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்வாணன் குடித்துவிட்டு என்னை தினமும் அடித்து துன்புறுத்தி வந்தான். வயதில் மூத்தவன். மரியாதையாக நடக்கும்படி பலமுறை எச்சரித்தேன். ஆனால் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்தநிலையில் நேற்று (நேற்று முன்தினம்) தமிழ்வாணன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். இதுதான் சரியான நேரம் எனக்கருதி அவனது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தேன். என்னை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்தார்.

இதையடுத்து தேவநாதனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆவடி அருகே கொலை செய்யப்பட்ட வாலிபர் அடையாளம் தெரிந்தது; முன்விரோதம் காரணமாக நண்பர்கள் கொன்றார்களா? என விசாரணை
ஆவடி அருகே அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வாலிபர்அடையாளம் காணப்பட்டார். முன்விரோதம் காரணமாக நண்பர்களே அழைத்து சென்று கொலை செய்தார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. ரவுடியின் உறவினர் வெட்டிக்கொலை; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
காஞ்சீபுரத்தில் பிரபல ரவுடியின் உறவினர் சரமாரியாக கத்தியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. துவாக்குடி அருகே காவலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது
துவாக்குடி அருகே தனியார் நிறுவன காவலாளியை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. சிங்கம்புணரி அருகே கொலை செய்யப்பட்ட வக்கீல் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
கொலை செய்யப்பட்ட அ.ம.மு.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை: அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆசிரியரின் தேர்வுகள்...