மாவட்ட செய்திகள்

உலக மக்கள்தொகை தினத்தையொட்டிகல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் ஊர்வலம் + "||" + By World Population Day A spectacular procession of college students and students

உலக மக்கள்தொகை தினத்தையொட்டிகல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் ஊர்வலம்

உலக மக்கள்தொகை தினத்தையொட்டிகல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் ஊர்வலம்
உலக மக்கள்தொகை தினத்தையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி, 

புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் உலக மக்கள்தொகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி போட்டி நடந்தது. செஞ்சிசாலை பாரதிதாசன் திடலில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். மேலும் மேளதாளம், கோலாட்டம், கரகாட்டம் என மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர்.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை அருகே முடிந்தது. அங்கு சிறந்த ஊர்வலத்தை நடத்திய கல்லூரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதன்படி முதல் பரிசை ராக் கல்லூரியும், 2-வது பரிசை ஏ.ஜி. பத்மாவதி கல்லூரியும், 3-வது பரிசை இந்திராணி கல்லூரியும் பெற்றன. ஈஸ்ட்கோஸ்ட், மதர் தெரசா கல்லூரிகளுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.

பரிசுகளை புதுவை அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் அல்லிராணி, முருகன், ரகுநாதன், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 2,981 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது.
2. தேன்கனிக்கோட்டையில் அரசு பஸ்சில் டிரைவர்-கண்டக்டர் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி
தேன்கனிக்கோட்டையில் அரசு பஸ்சில் டிரைவர்-கண்டக்டர் இல்லாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
3. வேப்பனப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு ½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது மாணவ, மாணவிகள் அதிர்ச்சி
வேப்பனப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு ½ மணி நேரம் தாமதமாக தொடங்கியதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
4. 2,873 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
உத்திரமேரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.