மாவட்ட செய்திகள்

தவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு + "||" + Larry, cars clash in succession; Traffic impact

தவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு

தவளக்குப்பம் அருகே லாரி, கார்கள் அடுத்தடுத்து மோதல்; போக்குவரத்து பாதிப்பு
தவளக்குப்பம் அருகே ஒரு லாரி மற்றும் 4 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. அதனால் புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாகூர்,

சீர்காழி அருகே ராஜாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகஜீவன்ராம் (வயது 28). இவர் நேற்று புதுச்சேரிக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். அவருடைய கார் கடலூர்-புதுச்சேரி ரோட்டில் தவளக்குப்பத்தை அடுத்த எடையார்பாளையம் அருகே சென்றபோது அவருடைய காரை ஒரு கார் வேகமாக முந்திச்செல்ல முயன்றது. அந்த கார் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக ஜெகஜீவன்ராம் தன்னுடைய காரின் வேகத்தை குறைத்தார். அப்போது அவருடைய காரின் பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. லாரி மோதிய வேகத்தில் இவரது முன்னால் சென்ற கார் மீது மோதியது. அந்த கார் அதற்கு முன்னால் சென்ற கார் மீது மோதியது என அடுத்தடுத்து தொடர்ந்து 4 கார்கள் மோதிக்கொண்டன.


இந்த விபத்தில் ஜெகஜீவன்ராமின் கார், தென்காசியை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரின் கார், புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த வேல் முருகன் ஓட்டிச் சென்ற கார், வில்லியனூர் திருக்காஞ்சியை சேர்ந்த மணவாளதாஸ் ஓட்டிச் சென்ற கார் ஆகிய 4 கார்கள் சேதமடைந்து நடுரோட்டில் நின்றன.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கார்கள் மட்டும் சேதமடைந்தன.

அதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது. எப்போதும் மிகவும் பரபரப்பாக வாகனங்கள் சென்று வரும் இந்த ரோட்டில் போக்குவரத்து தடைபட்டதால் சிறிது நேரத்திலேயே ஏராளமான வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

அதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், போலீஸ் ஏட்டு செஞ்சிவேல் மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளாகி நின்ற கார்களை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு கடலூர்-புதுச்சேரி ரோட்டில் மீண்டும் படிப்படியாக போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தொப்பூர் கணவாயில் 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி ஆழ பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.
2. லாரி மீது கார் மோதல்: வாலிபர் பலி- ஓட்டல் உரிமையாளர் படுகாயம்
சத்திரப்பட்டி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். நண்பரான ஓட்டல் உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.
3. கூடலூரில் பரிதாபம், லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மாணவர்கள் பலி
கூடலூரில் லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் லாரி சிக்கியது.
5. லாரி-மினிவேன் மோதி விபத்து; 13 பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே லாரி மீது மினி வேன் ஒன்று மோதிய விபத்தில், வேனில் இருந்த 13 பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.