மாவட்ட செய்திகள்

சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி + "||" + start going on Sonia Gandhi track - Minister Namachivayam Make sure

சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் என்று புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டும் அன்னை, காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டிக்காத்து வழிநடத்திய தியாக தலைவி சோனியாகாந்தியை மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


காங்கிரஸ் பேரியக்கத்திற்கு சோதனை வந்தபோதெல்லாம் தன்னுடைய சாதுரிய அரசியல் நெறியாள்கை மூலம் சாதனைகளாக மாற்றி காட்டிய சரித்திர தலைவி சோனியாகாந்தி. சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்ற மாபெரும் சக்திகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் பேரியக்கத்தை புதுப்பொலிவுடன் வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்கிற நம்பிக்கை எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

மதவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்த ஜனநாயக குரல் வளையை நெரித்து சர்வாதிகார ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அரசை நாட்டைவிட்டு அப்புறப்படுத்த சோனியாகாந்தி தலைமை ஏற்று ஒன்றிணைந்து அனைவரும் பாடுபடுவோம்.

சமதர்ம சமத்துவ இந்தியாவை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களையும் சோனியாகாந்தி பாதுகாப்பார் என்ற நம்பிக்கை தற்போது எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. சோனியாகாந்தி காட்டும் பாதையில் பயணித்து காங்கிரஸ் பேரியக்கத்தை கண் துஞ்சாது புதுவை பிரதேச காங்கிரஸ் என்றென்றும் காத்து நிற்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க சோனியா மறுப்பு
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
2. எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று சந்திப்பு -நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகள், பாங்காக் நகரில் நடக்கும் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவுப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடுகின்றனர்.
3. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
4. அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து
அரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
5. 'செத்த எலி' என சோனியா காந்தி குறித்த விமர்சனம்; காங்கிரஸ் கண்டனம்
சோனியா காந்தியை செத்த எலியுடன் ஒப்பிட்டு பேசிய அரியானா முதல் மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.