மாவட்ட செய்திகள்

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு + "||" + Kamaraj Nagar constituency by-election: Throughout the novel Monitoring - Officials Collector's order

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: புதுவை முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு புதுவை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
புதுச்சேரி,

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் கலெக்டர் அருண் தலைமையில் மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சப்-கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராகுல் அல்வால், அகன்ஷா யாதவ், போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், நகராட்சி ஆணையர்கள் அர்ஜூன் ராமகிருஷ்ணன் (புதுச்சேரி), கந்தசாமி (உழவர்கரை) மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அருண் பேசியதாவது:-

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. எனவே மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பறக்கும் படை அதிகாரிகள் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும். வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுத்தமாக வைக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபட மத்திய ராணுவப்படை வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவர்கள் தங்குவதற்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காமராஜ்நகர் தொகுதி இடைத்தேர்தலில் 9 பேர் போட்டி
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.
2. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை - அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
3. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்; காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல்
புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்பட மொத்தம் 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
4. காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது - புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.