மாவட்ட செய்திகள்

கையெழுத்தை போலியாக போட்டு, மின்துறை பெண் ஊழியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி - கணவர் மீது வழக்கு + "||" + To the minstrel female servant Rs.24½ lakh fraud Case against husband

கையெழுத்தை போலியாக போட்டு, மின்துறை பெண் ஊழியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி - கணவர் மீது வழக்கு

கையெழுத்தை போலியாக போட்டு, மின்துறை பெண் ஊழியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி - கணவர் மீது வழக்கு
கையெழுத்தை போலியாக போட்டு மின்துறை பெண் ஊழியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி செய்ததாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,

புதுவை வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி(வயது 43). மின்துறை ஊழியர். இவரது கணவர் பிரபாகரன்(42). பாகூர் பழைய காமராஜர் நகரை சேர்ந்தவர். சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர்.


இந்தநிலையில் ஜான்சிராணி புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் வங்கியில் கடன் பெற விண்ணப்பித்தார். அப்போது ஏற்கனவே வங்கி, தனியார் நிதிநிறுவனம் மூலம் மொத்தம் ரூ.24 லட்சத்து 52 ஆயிரத்து 645 கடன் வாங்கப்பட்டுள்ளது. எனவே கடன் வழங்க முடியாது தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டு ஜான்சி ராணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடன் பெற்றதற்கான ஆவணங்களை வாங்கி சரிபார்த்த போது அவரது கணவர் பிரபாகரன் ஜான்சிராணியின் கையெழுத்தை போலியாக போட்டு அவரது பெயரில் ரூ.24லட்சத்து 52 ஆயிரத்து 645 கடன் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து அவர் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.