மாவட்ட செய்திகள்

மழை பாதித்த பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார் + "||" + The governor visited areas affected by rain

மழை பாதித்த பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார்

மழை பாதித்த பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார்
புதுவையில் மழை பாதித்த பகுதிகளில் கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்.
புதுச்சேரி,

புதுவையில் கடந்த 3 நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது. நேற்று காலை கவர்னர் கிரண்பெடி மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் உப்பனாறு வாய்க்காலை பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து மரப்பாலம், நடேசன் நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம், ரெயின்போநகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் மழைநீரை வெளியேற்றவும், போக்கு வரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தொடர்மழை ஏற்படும் போது மரப்பாலம் சந்திப்பு போக்குவரத்துக்கு சவாலாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் அதிக தண்ணீர் செல்ல போதுமானதாக இல்லை. எனவேதான் மழைகாலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு உடனடியாக பொறியியல் சார்ந்த தீர்வு தேவை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும்போது இதனை முழுமையாக சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்கு குற்றப்பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் நிலையத்தை சுற்றிப்பார்த்த அவர், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க போலீசாரை அறிவுறுத்தினார். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கையில் ஆதாரங்கள் இருந்தால், பொதுமக்கள் நேராக சி.பி.ஐ. அலுவலகத்தை அணுக முடியும் - கவர்னர் கிரண்பெடி தகவல்
கையில் ஆதாரங்கள் இ்ருந்தால் பொதுமக்கள் நேராக சி.பி.ஐ. அலுவலகத்தை அணுக முடியும் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
2. கவர்னர் மாளிகைக்கு அமைச்சர்களை வரவிடாமல் தடுப்பது யார்? முதல்-அமைச்சருக்கு, கவர்னர் கேள்வி
கவர்னர் மாளிகைக்கு அமைச்சர்களை வரவிடாமல் தடுப்பது யார்? என்று முதல்-அமைச்சருக்கு கவர்னர் கிரண்பெடி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. புதுச்சேரிக்கு சி.பி.ஐ. கிளை தேவை - கவர்னர் கிரண்பெடி தகவல்
புதுச்சேரிக்கு சி.பி.ஐ. கிளை தேவை என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
4. கவர்னர் கிரண்பெடி மீதான மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை - நாராயணசாமி விளக்கம்
புதுவை மாநில தீவு தொடர்பாக கவர்னர் கிரண்பெடி மீது மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.
5. கவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
கவர்னர் கிரண்பெடி மத்திய அரசின் ஊது குழலாக செயல்படுகிறார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.