மாவட்ட செய்திகள்

புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் + "||" + All the ration cards of the new ones will be paid in bank accounts of Rs.2,000 each

புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்

புதுவையை சேர்ந்த அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்
புதுவையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த 22-ந் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் அன்று இரவு 9 மணி முதல் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.


இதையடுத்து சட்டசபை வளாகத்தில் நேற்று காலை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

ரூ.2ஆயிரம் நிவாரணம்

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த தொகை விரைவில் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

கடைகள் திறந்து இருக்கும்

புதுவை மாநிலத்தில் மருந்துகடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும் என்று இன்று (நேற்று) காலை அறிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் பால், மளிகை கடைகள், காய்கறி கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதை ஏற்றுக் கொண்டு மருந்து கடைகள், பால் பூத், காய்கறி கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் திறந்து இருக்க அனுமதிக்கப்படும். அங்கு பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது. அவ்வாறு கூடினால் நாளை (இன்று) இரவு முதல் அனைத்து கடைகளும் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் உடனிருந்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு பழங்குடிகள் நலவாரிய அட்டை சங்க கூட்டத்தில் தீர்மானம்
மலைக்குறவன் சாதி சான்று வைத்துள்ளவர்களுக்கு தமிழ்நாடு பழங்குடிகள் நலவாரிய அட்டை பெற்றுத்தந்திட வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியதால் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
3. 144 தடை உத்தரவால் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
4. காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதியது; வத்திராயிருப்பில் கடைகளில் கூட்டம் திரண்டிருந்தது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காய்கறி வாங்கவும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
5. உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது
உணவு பொருள் விற்பனை நிலையங்களில் இருமல், காய்ச்சல் உள்ளவர்களை பணியில் சேர்க்க கூடாது என மன்னார்குடி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.