மாவட்ட செய்திகள்

மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல் + "||" + Liquor store licenses need to formulate a more general policy of bidding; The Governor's insistence

மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல்

மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும்; கவர்னர் வலியுறுத்தல்
புதுச்சேரியில் மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி, 

 புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

கவர்னர் மாளிகை கடந்த 4 ஆண்டுகளாக மதுக்கடைகளுக்கான உரிமங்களை ஏலம் விட ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் புதுவை மாநில கருவூலத்துக்கு வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்துவரி உள்பட பல நிலுவைதொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். 

குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த கூறினேன். அரசு சொத்துகளை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து அதை சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது. 

காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை புதுவை அரசு பார்க்க வேண்டும். அரசு இந்த ஆதாரங்களின் அடிப்படையை நோக்குவது அவசியம். மத்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது. 

இதுபோன்ற நிலையை புரிந்து கொண்டு, அதை செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. அத்துடன் வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் திட்டங்களை பின்பற்ற முடிவெடுப்பவர்களுடனே தொடர வேண்டும். இதற்கு கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் வழங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர் மாளிகை மூலம் 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு; கிரண்பெடி தகவல்
புதுவையில் கவர்னர் மாளிகை மூலம் 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
2. மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்; கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுச்சேரியில் மீனவர் களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
3. புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறப்பதில் சிக்கல்
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
4. கலால், நகராட்சி சட்டங்கள் கடுமையாக்கப்படும்; கவர்னர் கிரண்பெடி அதிரடி
அரசுக்கு சொந்தமானதை மீட்டெடுப்பதை நோக்கி நிர்வாகம் முன்னேறுகிறது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
5. புதுவையில் மதுக்கடைகளை திறக்க கவர்னரின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம்
கவர்னர் கிரண்பெடி அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.