மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியை பின்பற்றுவதில் முன்னேற்றம் தேவை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல் + "||" + The need for progress in bridging the social gap

சமூக இடைவெளியை பின்பற்றுவதில் முன்னேற்றம் தேவை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்

சமூக இடைவெளியை பின்பற்றுவதில் முன்னேற்றம் தேவை கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
புதுச்சேரியில் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல் மற்றும் உள்ளாட்சித்துறை வழிமுறைகளை பின்பற்றாதவர்கள், முக கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.


அதன்படி நேற்று முக கவசம் அணியாத 3,254 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1,373 பேருக்கும், எச்சில் துப்பியதாக 48 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவரத்தை கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சில இடங்களில் நடவடிக்கை மிக மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னேற்றம் தேவை

இந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:-

காவல் மற்றும் உள்ளாட்சி துறையில் கொடுத்த விவரங்கள் வந்துள்ளது. நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் விதிமுறைகளை அமல்படுத்துவதோடு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதை அமல்படுத்துவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. சமூக இடை வெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது ஆகியவற்றில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் கிரண்பெடி வேண்டுகோள்
பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலிலை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருக்கும் கருத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து இருப்பதுடன் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
3. அரசு துறைகள் சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது அவசியம் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
அனைத்து அரசு துறைகளும் செலவினங்களை குறைத்து சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் பிரதமரிடம், நாராயணசாமி வலியுறுத்தல்
கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ரூ.1,000 கோடி வழங்க வேண்டும். மே 3-ந் தேதிக்கு பிறகு எடுக்கும் முடிவுகள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
5. கிரண்பெடி குறித்து அவதூறு பேச்சு: நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் குமரி வந்ததால் பரபரப்பு
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் குமரி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் திரும்பி சென்றனர்.