மாவட்ட செய்திகள்

மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவோம் அ.ம.மு.க. உறுதி + "||" + People We will fight for fundamental rights Ammk Confident

மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவோம் அ.ம.மு.க. உறுதி

மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவோம் அ.ம.மு.க. உறுதி
மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவோம் என அ.ம.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,

புதுவை மாநில அ.ம.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வின் தலைமையை ஏற்று, கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரெங்கசாமி முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அ.ம.மு.க.வில் இணைந்தனர். அதன்படி புதுவை மாநில அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர், உழவர்கரை அம்மா பேரவை செயலாளர் அனிதா, முன்னாள் ஐ.என்.டி.யு.சி. மாநில செயலாளர் கன்னிவேலு, முன்னாள் பாகூர் வட்டார காங்கிரஸ் தலைவர் பாவாடை, முன்னாள் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில துணைத்தலைவர் பக்தவச்சலம் பிரேம், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கணேசன், முன்னாள் உப்பளம் வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் குப்புசாமி, உப்பளம் வட்டார முன்னாள் காங்கிரஸ் இளைஞரணி பொதுச்செயலாளர் விஷ்ணுவிடனன் மற்றும் கோபிசங்கர் ஆகியோர் அ.ம.மு.க.வில் சேர்ந்தனர்.


அதனைதொடர்ந்து நிருபர் களிடம் அ.ம.மு.க. துணைச்செயலாளர் ரெங்கசாமி கூறியதாவது:-

மக்களை பாதிக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதை தட்டிக் கேட்போம். சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் இயக்கமாக அ.ம.மு.க. இருந்து வருகிறது. சாமான்ய மக்களின் குறையை மட்டும் சுட்டிக் காட்டுவதோடு அல்லாமல் அதற்கு தீர்வு என்ன? என்பதையும் எடுத்துச்சொல்லும் தலைவராக டி.டி.வி. தினகரன் செயல்படுகிறார். புதுச்சேரியில் எந்த ஒரு இயக்கமும் செய்யாத பணியை அ.ம.மு.க. மேற்கொண்டு வருகிறது. தங்களால் முடிந்த நிவாரணப் பணிகளை கட்சியினர் செய்து வருவது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் புதுவை மாநில அ.ம.மு.க. செயலாளர் வேல்முருகன், அமைப்பு செயலாளர் அருள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...