மாவட்ட செய்திகள்

கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை நவீன சுற்றுலாத் தலமாக்க பணிகள் தீவிரம் அமைச்சர் கந்தசாமி ஆய்வு + "||" + Intensity of work to make Krumambakkam Big Lake a modern tourist destination Minister Kandasamy inspected

கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை நவீன சுற்றுலாத் தலமாக்க பணிகள் தீவிரம் அமைச்சர் கந்தசாமி ஆய்வு

கிருமாம்பாக்கம் பெரிய ஏரியை நவீன சுற்றுலாத் தலமாக்க பணிகள் தீவிரம் அமைச்சர் கந்தசாமி ஆய்வு
கிருமாம்பாக்கம் பெரிய ஏரியில் நடைபெற்று வரும் சுற்றுலா திட்ட பணிகளை அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாகூர்,

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நவீன சுற்றுலாத்தலமாக மாற்ற அமைச்சர் கந்தசாமி சுற்றுலாத்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5 கோடி செலவில் நவீன சுற்றுலா தலமாக்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.


இங்கு உணவகம், சிறுவர் பூங்கா, படகு குழாம், ஏரிக்கு வரும் பறவைகளை காண்பதற்காக உயரமான கோபுரம் (வாட்ச் டவர்) மற்றும் ஏரிகரைகளை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.

வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்

இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பணிகளையும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் மத்திய கைவினைப் பொருட்கள் அபிவிருத்தி ஆணையரும், அலுவலக உதவி இயக்குனருமான வினோத்குமாருடன் சுற்றுலா திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் கடைகள் அமைப்பது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் பிரிவு செயற்பொறியாளர் ரமணி, இளநிலை பொறியாளர் பாலாஜி, சுற்றுலாத்துறை மேலாளர் பூபாலன், கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் ரங்கநாதன், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.600 கோடி மதிப்பில் பவானி-தொப்பூர் ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணி விரைவில் தொடக்கம் அமைச்சர் தகவல்
ரூ.600 கோடி மதிப்பில் பவானி-தொப்பூர் ரோடு 4 வழிச்சாலையாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
2. நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு
நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்கின்றனர்.
3. நெல் கொள்முதல் குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நாகையில், மத்திய குழுவினர் பேட்டி
22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து ஆய்வுக்குப்பின் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று நாகையில், மத்தியக்குழுவினர் கூறினர்.
4. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான போர்வைகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான போர்வைகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.
5. “அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.